சின்னாளபட்டி: வீணாகும் பேரூராட்சி குடிநீா்..பொதுமக்கள் கவலை

64பார்த்தது
சின்னாளபட்டி: வீணாகும் பேரூராட்சி குடிநீா்..பொதுமக்கள் கவலை
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வைகை ஆற்றில் உள்ள உறைகிணறுகளிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்தக் குழாய்கள் நிலக்கோட்டை நகர்ப்பகுதி வழியாகச் செல்கின்றன. இந்த நிலையில் நிலக்கோட்டை பேரூராட்சியில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகளின் போது, அடிக்கடி ராட்சத குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. 

நிலக்கோட்டையில் அணைப்பட்டி சாலையோரத்தில் புதிய கழிவுநீர்க் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பணியின்போது, சின்னாளபட்டி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகப் பாய்ந்தது. இதைக் கண்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்தனர். எனவே குடிநீர்க் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதைக் கண்காணித்து, சரிசெய்து குடிநீர் வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். 

இதுகுறித்து, சின்னாளபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி கூறுகையில், நிலக்கோட்டையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது குடிநீர் குழாயை உடைத்து விட்டனர். இன்று சரி செய்யப்படும் என்றார் அவர்.

தொடர்புடைய செய்தி