சின்னாளபட்டி: கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை

66பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சார்பில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சின்னாளப்பட்டி காந்தி மைதானத்தில் கொள்கை தலைவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மத்திய மாவட்ட செயலாளர் தேவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் மத்திய மாவட்ட செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேவாவிற்கு மேளதாளம் வெடி என வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் ஜேசிபி எந்திரம் மூலம் மலர் தூவி வரவேற்றனர்.

இதில் வேலுநாச்சியார், காமராஜர், தந்தை பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் திருவுருவம் பொறிக்கப்பட்ட அரங்கில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆத்தூர் ஒன்றிய நிர்வாகிகள் ஜான் பீட்டர், மாரிமுத்து, ராஜா ரஞ்சித் ஆகியோர் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி