திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மாநில கழக துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ''வரும் 2026 சட்டமன்ற தேர்தல் விரைவில் வந்துவிடும். இந்த புத்தாண்டில் இருந்து அதற்கான பணிகளை ஒவ்வொருவரும் தொடங்க வேண்டும். கலைஞர் வழியில் வந்த திராவிட மாடல் ஆட்சி நாயகன் கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கரத்தை பலப்படுத்தும் வகையில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை இலக்காக வைத்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்து புத்தாண்டு முதல் தேர்தல் பணி ஆற்றுங்கள். உங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுங்கள் அதற்கான முழு ஒத்துழைப்பும் தர நான் தயாராக உள்ளேன். அதுபோல் ஆத்தூர் தொகுதியில் கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிகள் முடிவடைந்த உடன் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும், கலைஞரின் கனவு இல்ல திட்டம் மூலம் வீடுகள் வழங்கப்படும்" என்று கூறினார்.