திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் - ஒட்டன்சத்திரம் சாலை (கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு) அருகே இறந்து சில நாட்களாக நமது தேசிய பறவை மற்றும் இந்திய வன உயிரின பாதுகாப்பு பட்டியலில் உள்ள மயில் ஒன்று சாலையின் ஓரத்தில் தலை இல்லாமல் அழுகிய நிலையில் கிடக்கிறது. இறந்து சில நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை மற்றும் வனத்துறையினர் கண்ணில் படவில்லையா அல்லது கண்டும் காணாமல் விட்டுவிட்டனரா என கேள்வியுடன் சமூகவலைதளங்களில் வன ஆர்வலர்கள் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளனர்.