ஆத்தூர்: 45 இடங்களில் ஸ்ரீ சந்து மாரியம்மன் கும்பிடு விழா

73பார்த்தது
சின்னாளபட்டியில் நேற்று 45 இடங்களில் ஸ்ரீசந்து மாரியம்மன் கும்பிடு விழா நடைபெற்றது. அம்மன் கரகத்தை அலங்கரிக்க பிருந்தாவனத்தோப்பு, தேவி கருமாரியம்மன் கோவில், சிவசுப்ரமணியர் கோவிலில் முளைப்பாரியுடன் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். 45க்கும் மேற்பட்ட தெருக்களில் ஸ்ரீசந்து மாரியம்மன் கும்பிடு விழா நடைபெற்றது. அதிகாலை 7 மணி முதல் அம்மன் கரகம் எடுப்பதற்காக பக்தர்கள் சின்னாளபட்டி பிரிவில் உள்ள பிருந்தாவனத்தோப்பு, கரியன்குளக்கரையில் உள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் கடைவீதியில் உள்ள ஸ்ரீசிவசுப்ரமணியர் சுவாமி கோவிலுக்கு முளைப்பாரி ஊர்வலத்துடன் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். பின்னர் அம்மன் கரகங்கள் அலங்காரம் செய்யப்பட்டு அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தனித்தனியாக முளைப்பாரி ஊர்வலம் மேளதாளத்துடன் அம்மனை தங்கள் பகுதிக்கு அழைத்து வந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி