SDPI கட்சி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை மதினா பேலஸ் மஹாலில் கட்சிக்கொடி ஏற்றி வைத்து கூட்டம் துவங்கியது.
சிறப்பு அழைப்பாளர்களாக
கட்சியின் மாநில செயலாளர் ஷபீக் அகமது மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும்,
திண்டுக்கல் மாவட்ட தலைவர் அபுதாஹிர் மாவட்ட துணைத் தலைவர் அப்துல் லத்தீப், மாவட்ட செயலாளர் அங்குசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பைசூர் ரஹ்மான் மற்றும் நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர் தொகுதி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நடைபெற்ற SDPI பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட, தொகுதி வாரியாக நிர்வாகிகள் தேர்வு உட்பட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.