நாடாளுமன்றத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை அவமதிக்கும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆத்தூர் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன உரை ஆர்ப்பாட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆத்தூர் ஒன்றிய செயலாளர் செ. அரசு தலைமையில் நடைபெற்றது. இளஞ் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், ரெட்டியார் சத்திரம் ஒன்றிய செயலாளர் குலதெய்வள் ஆகியோர் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் நிகழ்ச்சியில் மைய மாவட்டச் செயலாளர் தமிழரசன் மாநிலத் துணைச் செயலாளர் முற்போக்கு மாணவர் அணி மணிகண்டன் சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட பொருளாளர் பரமன் கிழக்கு காங்கிரஸ் கமிட்டி வட்டார காங்கிரஸ் தலைவர் செல்வராஜ் புலிப்படை மாவட்ட தலைவர் ரமேஷ் மூவேந்திரன், ஆத்தூர் ஒன்றிய துணைச் செயலாளர் உசேன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ராஜாமணி, இலக்கியராஜ், கல்யாணி, செல்வம், பால்ராஜ்
முகமதுமைதீன், பாலகிருஷ்ணன் உட்பட ஆத்தூர் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கூட்டணி கட்சியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.