திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு கள்ளிப்பட்டி பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் மதுவிலக்கு டிஎஸ்பி முருகன் தலைமையிலான போலீசார் கலால் உதவி ஆணையர் பால்பாண்டி தலைமையிலான குழுவினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இன்று அதிகாலை வாகன சோதனையின் போது வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஆம்னி பேருந்துகளில் வெளி மாநில மது பாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா? என்றும் சோதனை மேற்கொண்டனர்.