ஆத்தூர்: மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி

81பார்த்தது
திண்டுக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி என். பி. ஆர் அணி முதலிடம் பெற்றது.
திண்டுக்கல்லில் முதலாவது மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.
போட்டியை தனியார் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இருந்து 15 அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதிப் போட்டியில். திண்டுக்கல் என். பி. ஆர் கல்லூரி அணி
5: 1 என்ற கோல் கணக்கில் வென்று முதலிடம் பிடித்தது. எஸ். கே. சி. அணி இரண்டாம் இடமும், கேலோ இந்தியா அணியினர் மூன்றாம் இடமும் பிடித்தனர். முதலிடம் பிடித்த அணிக்கு ரூ. 5000 மற்றும் கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ரூ. 3, 000 மற்றும் கோப்பையும் மூன்றாம் இடம் பிடித்த அணிக்கு ரூ. 2000 மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது
பின்னர் கடந்த பரிசளிப்பு விழாவிற்கு உடற்கல்வி இயக்குனர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ். எஸ். எம் கலைக்கல்லூரி முதல்வர் சம்பத்குமார் கோப்பையை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி