ஆத்தூர்: லாரி சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்து

51பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி- நிலக்கோட்டை சாலையில் காமுபிள்ளை சத்திரம் அருகே செல்வம் (50) என்பவர் ஓட்டிச் சென்ற லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் புளியமரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் ஓட்டுநர் செல்வம் காயங்களுடன் விபத்துக்குள்ளான லாரிக்குள் இடிபாடுகளில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நிலையில் செம்பட்டி காவல்நிலைய தலைமை காவலர் மெல்வின் ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான லாரிக்குள் சிக்கி காயங்களுடன் வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஓட்டுநர் செல்வம் என்பவரை போராடி பத்திரமாக மீட்டனர். 

செம்பட்டி காவல்துறையினர் காயங்களுடன் மீட்கப்பட்ட ஓட்டுநரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி