திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோயிலில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சகல ஜீவராசிகளுக்கும் படியளுந்தருளிய லீலை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக காலை முதல் கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தது.
காலை 9: 00 மணிக்கு பத்மகிரிஸ்வரர் அபிராமி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினார். சர்வ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பத்மகிரிஸ்வரர், அபிராமி அம்மன், வள்ளி தெய்வானையோடு முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் தனித்தனி வாகனங்களில் 4 ரத வீதிகளிலும் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அப்போது பக்தர்களுக்கு அரிசி பிரசாதமாக வழங்கப்பட்டது.
மாலையிலும் கோயிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். * கொடைக்கானல் டிப்போ காளியம்மன் கோயிலில் கால பைரவருக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து சொர்ணாபிஷேகம், வடை மாலை சாத்துதல், பக்தர்கள் தேங்காய், மிளகு, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். அலங்காரத்தில் காட்சியளித்த காலபைரவரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அன்னதானம் நடந்தது.