திண்டுக்கல்லில் நடந்த தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வை 2507 மாணவர்கள் எழுதிய நிலையில் 190 பேர் பங்கேற்கவில்லை.
பிளஸ்-1 மாணவர்களுக்கு தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் 500 மாணவிகள், 500 மாணவர்கள் என 1000 பேருக்கு பிளஸ்-1 முதல் இளநிலை பட்டப்படிப்பை முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
அதன்படி நடப்பாண்டிற்கான திறனாய்வுத் தேர்வு நேற்று நடந்தது. திண்டுக்கல்லில் 6 , பழநியில் 4, கொடைக்கானலில் 1 என 11 தேர்வு மையங்களில் காலை, மதியம் என இரு வேளைகளில் தலா 2 மணி நேரம் தேர்வு நடைபெற்றது. விண்ணப்பித்திருந்த 2697 மாணவர்களில் 2507 பேர் தேர்வு எழுதினர். 190 பேர் ஆப்சென்ட் ஆகினர்.