தபால் ஓட்டு பெறுவதற்கு தனி மையம் அமைப்பு

58பார்த்தது
தபால் ஓட்டு பெறுவதற்கு தனி மையம் அமைப்பு
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தபால் ஓட்டு பெறுவதற்கு தனி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணி புரியும் காவல்துறையினர், ஊர் காவல்படையினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் இதர அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் தனி சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்கு பதிவு செய்யும் மையங்கள் அமைக்கப்பட்டன.

இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ. பிரதீப், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தபால் வாக்கு மையத்தை பார்வையிட்டு தனது தபால் வாக்கினை பதிவு செய்தார்கள்.

தொடர்புடைய செய்தி