நடந்து சென்றவர் மீது கார் மோதி விபத்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.
திண்டுக்கல், காந்திகிராமம் அருகே உள்ள சாமியார் பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்-47. இவர் பழனி அருகே உள்ள சத்திரப்பட்டி பகுதியில் நடந்து வந்த போது, பின்னே வந்த கார் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.