திண்டுக்கல் அருகே நல்லம்மநாயக்கன் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. இதற்கு தெற்கு ஒன்றிய
திமுக செயலாளர் சிறுமலை வெள்ளிமலை தலைமை தாங்கினார். இதில் வேலுச்சாமி எம். பி. கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இதில் முன்னாள் எம். எல். ஏ. ஆண்டி அம்பலம், நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்ஷா, ஒன்றிய குழு தலைவர் ராஜா, துணை தலைவர் சோபியா ராணி பாஸ்கர், மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரி, தோட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் கார்த்திகா செந்தில்குமார், மாணவர் அணி அமைப்பாளர் செந்தில், இளைஞரணி துணை அமைப்பாளர் ரூபன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கள்ளிப்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி,
வெள்ளோடு, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.