1100 கிலோ ரேஷன் அரிசி, ஆம்னி வேன் பறிமுதல்

67பார்த்தது
1100 கிலோ ரேஷன் அரிசி, ஆம்னி வேன் பறிமுதல்
திண்டுக்கல் அருகே தீவனத்திற்காக ரேஷன் அரிசி கடத்துவதாக திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கீதா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் சின்னாளப்பட்டி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது வேகமாக வந்த வேலை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது இதனை அடுத்து ரேஷன் அரிசி கடத்தி சென்ற திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த சாம்ராஜ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1100 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி