இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் திமுத் கருணாரத்னே 100வது டெஸ்ட் போட்டி முடிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். இலங்கையின் காலே நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் போட்டி, திமுத்திற்கு 100வது போட்டியாகும். அந்த போட்டிக்கு பின்னர் தான் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். அவர் விளையாடிய முதல் போட்டியும் காலேவில் தான் நடந்தது.