கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான வைரமுத்துவின் பாடல் வரிகளான பொன்மாலைப் பொழுது, மெளன ராகம், மின்சாரக் கண்ணா, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று போன்ற வரிகளை பலரும் படங்களுக்கு தலைப்பாக வைத்துள்ளனர். சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை, ஆனால் மரியாதைக்கு கூட என்னிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை என வைரமுத்து ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.