காசா மீது ஈவு இரக்கமற்ற போரை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில், போரின்போது இஸ்ரேல் ராணுவத்திற்கு புலனாய்வு, மொழிபெயர்ப்பு மற்றும் இலக்கு கண்டறிதல் போன்ற பணிகளுக்கு Azure AI மற்றும் கிளவுட் சேவைகளை இஸ்ரேல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், இவற்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் இஸ்ரேலுக்கு விற்பனை செய்துள்ளதாக ஏபி எனும் சர்வதேச செய்தி ஊடகம் திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டுள்ளது. ஆனால், இதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.