'ஆபரேசன் சிந்தூர்' நடவடிக்கையின்போது, பாகிஸ்தானின் கிரானாவில் உள்ள அணு ஆயுத சேமிப்பு கிடங்கை இந்திய ஏவுகணைகள் தாக்கியதால், கதிர்வீச்சு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து, சர்வதேச அணுசக்தி நிறுவனம் IAEA அங்கு ஆய்வு செய்ததில், "பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு அணுசக்தி நிலையத்திலிருந்தும் எந்தவொரு கதிர்வீச்சு கசிவும் ஏற்படவில்லை” என தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த குற்றச்சாட்டுகளை இந்திய விமானப் படை மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.