அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற தொடர் பிரச்சார சுற்றுப் பயணத்தை ஜூலை 7-ம் தேதி தொடங்க உள்ளார். இதை முன்னிட்டு "சரித்திர நாயகன்.. சாமானிய நாயகன்" என்ற பிரச்சார பாடலை இபிஎஸ் இன்று வெளியிட்டார். இந்நிலையில், இந்த பாடலின் ஆரம்ப இசையும், தவெக கொடி பாடலின் தொடக்க இசையும் ஒன்று போல் உள்ளதாம். தவெக கொடி பாடலின் இசையை அதிமுக காப்பியடித்தாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது