நாம் உண்ணும் காய்கறிகளினாலேயே ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம், எந்தக் காயை உண்கிறோம் என்று தேர்ந்தெடுப்பது இரத்த சர்க்கரை மேலாண்மைக்கான சிறந்த வழியாகும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். போதுமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது ஆரோக்கியமான உணவுப்பழக்கம் ஆகும். ஆரோக்கியமான உணவை உண்டால் நீண்ட காலம் நோய் நொடியில்லாமல் வாழலாம். பெண்களுக்கு ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் காய்கறிகளும், ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 4 கப் காய்கறிகளும் தேவை என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வெவ்வேறு காய்கறிகளில் வெவ்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் பல்வேறு வகையான நார்ச்சத்துக்கள் உள்ளன, மேலும் அவை அனைத்தும் நீரிழிவு மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை ஆகும். நீரிழிவு மேலாண்மைக்கான காய்கறிகள் பல இருந்தாலும் அவற்றை பட்டியலிட்டால் முக்கியமான காய்கள் இவை.