லோகன் இயக்கத்தில் பெயரிடப்படாத தமிழ் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோவை, இந்திய கிரிக்கெட் வீரர் ஷிவம் துபே நேற்று (ஜூலை 5) வெளியிட்டார். இந்நிலையில், 'இந்தப் படத்தில் தோனி நடிப்பாரா?' என ரெய்னாவிடம் கேட்கப்பட்டதற்கு, ‘அதற்கு தோனிதான் பதில் சொல்ல வேண்டும்' என தெரிவித்துள்ளார்.