இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஹால் ஆஃப் ஃபேமில் தேர்வாகி உள்ளார். இந்த வருட ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேமில் தோனி, ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன், தென்னாப்பிரிக்காவின் ஹாஷிம் ஆம்லா மற்றும் கிரேம் ஸ்மித் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக நேற்று (ஜூன் 9) ICC அறிவித்துள்ளது. இந்த கௌரவத்தைப் பெறும் 11-வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.