டூவீலர் டயர் வெடித்து 3 தொழிலாளர்கள் காயம்

1763பார்த்தது
கடத்தூர் அடுத்த தென்கரைகோட்டை பாத்திமா நகரைச் சேர்ந்தவர்கள் பிண்டோ, ஆரோக்கியதாஸ், அந்தோணி, கூலி தொழி லாளர்கள். இவர்கள் 3 பேரும், கடத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு செல்வதற்காக பைக்கில் தென்கரைகோட்டை-கடத்தூர் சாலையில் சென்றனர். பிண்டோ, அந்தோணி பைக்கில் பின்னால் அமர்ந்திருந்தனர். ஆரோக்கியதாஸ் பைக்கை ஓட்டிச் சென்றார். பைக் புட்டிரெட்டிப் பட்டி சாலையில் செல்லும் போது, பைக்கின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறி மூவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி