மாரியம்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

64பார்த்தது
தர்மபுரி மாவட்டம் இண்டூர் காவல்துறையின் சார்பாக மாரியம்பட்டி கிராம பகுதியில் ரோந்து
சென்றனர். அப்போது அங்குள்ள அறுமுகம் என்பவருடைய
மளிகை கடையில் காவலர்கள் சோதனை நடத்தினர். அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரர் ஆறுமுகத்தை காவலர்கள்
கைது செய்தனர். மேலும் கடையில் வைத்திருந்த 25 கிலோ புகையிலை பொருட்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். காவல்துறையினர் அப்பகுதி கிராம மக்களிடம் புகையிலை பொருட்கள் கள்ளச்சாராயம் ஆகியோர் விற்பனை மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர் இதேபோல் கிராம மக்கள் இதுபோன்று போதை பொருட்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களிடையே தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி