மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

71பார்த்தது
மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சியில் அம்ரூத் 2. 0 (2023-24) திட்டத்தின்கீழ் ரூ. 77. 00 இலட்சம் மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் நாகலேரி மேம்பாட்டுப் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மேம்பாட்டு பணியினை குறிபிட்ட கால அளவிற்குள் முடித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுத்தினார். காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அடிலம் ஊராட்சி அ. சப்பாணிப்பட்டியில் பூலாப்பட்டி ஆற்றின் குறுக்கே 2021 -2022 ஆம் ஆண்டு நபார்டு XXVII திட்டத்தின் கீழ் ரூ. 206. 00/-இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் உயர்மட்டபாலம் அமைக்கும் பணிகளையும், பூமாண்டஅள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 24. 50/-இலட்சம் மதிப்பீட்டில் புதிய குளம் அமைக்கும் பணிகளையும். காளப்பனஅள்ளி, பூமாண்டஅள்ளி ஊராட்சிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கணக்கெடுக்கும் பணிகள் என மொத்தம் ரூ. 3. 28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி இஆப. , இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வட்டார வளர்ச்சி அலுவலர், உதவிப் பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி பணி மேற்பார்வை யாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி