விஜய் ஏஸ் அகாடமியின் மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை

59பார்த்தது
தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்விக் குழுமத்தின் விஜய் ஏஸ் அகாடமியின் மாணவர்கள் மாநில மற்றும் மாவட்ட அளவிலும் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர் 2023-2024 கல்வியாண்டில் விஜய் ஏஸ் அகாடமியில் நீட் பயிற்சி பயின்ற 200 மாணவர்களில் 75 மேற்பட்ட மாணவர்கள் தமிழகத்தின் முதன்மையான கல்லூரிகளில் சேர்க்கை பெற உள்ளனர். மோனிகேஷ்வரன் 695 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடமும், மாணவி மகாலஷ்மி 664 மதிப்பெண்கள் பெற்று தமிழக அரசின் 7. 5 சதவித இட ஒதுக்கிட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்று பெற்றுள்ளார். மேலும் 650க்கு மேல் 5 பேர், 600க்கு மேல் 20 போர், 575க்கு மேல் 26 பேரும், 550க்கு மேல் 33 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்று சதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விஜய்ஸ் ஏஸ் அகாடமி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்விக்குழுமத்தின் தலைவர் D. C இளங்கேவன் தலைமைத் தாங்கினார், தாளாளர், மீனாஇளங்கோவன், இயக்குநர்கள் பிரேம், சினேகா பிரவின், D. C இளங்கேவன் விஜய்ஸ் ஏஸ் அகாடமி தொடங்கிய ஆண்டிலிருந்து 150 க்கும் மேற்பட்ட மாணவர்களை MMC, KMC, Stanley போன்ற கல்லூரிகளில் சேர்க்கை பெற்று மருத்துவர்களை உருவாக்கி சாதனை படைத்து வருகிறோம். விஜய் ஏஸ் அகாடமியின் சார்பில் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்ன்அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்

தொடர்புடைய செய்தி