தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி நல்லம்பள்ளி வட்டதுக்குட்பட்ட இண்டூர் அருகே உள்ள நாகர்கூடல் பகுதியில் இண்டூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப் போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை காவலர்கள் கைது செய்தனர். இதேபோல் பஞ்சப்பள்ளிராமன் கொட்டாய் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 7 பேரை காவலர்கள் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 56 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.