பென்னாகரம்: ஒகேனக்கலில் 1200 கனஅடியாக நீர்வரத்து சரிவு

76பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தினசரி பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்த செல்வது வழக்கம் இந்த நிலையில் சமீப நாட்களாக வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி காரணமாக ஒகேனக்கல் வனப்பகுதி மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழிந்த மலையின் காரணமாக இரு தினங்களாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1500 கன அடி வீதம் நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் மார்ச் 16 இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1200 கன அடியாக நீர்வரத்து சரிந்து காணப்படுகிறது. மேலும் இன்று வார விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கலை கட்டியுள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியல் குறித்தும் பரிசலில் பயணம் சென்றும் விடுமுறை தினத்தை கழித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி