தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக தமிழக மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில் உள்ள காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்தும் குறைந்தும் காணப்படும் சூழலில் நேற்று மாலை பத்தாயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நவம்பர் 10 இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 9000 கன அடியாக நீர் வரத்து சரிந்து காணப்பட்டுள்ளது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதிகாலை முதலே மெயின் அருவி, சினி ஃபால்ஸ், தொங்கும் பாலம், உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.