மாரியம்மன் கோவிலில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

1083பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி அடுத்துள்ள ராமலூர் கிராமத்தில், மாரியம்மன் கோயில் உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கோயில் பூசாரியாக உள்ளார். இன்று காலை, மாரியப்பன் கோயிலை திறக்க வந்த போது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, உண்டியல் மாயமாகி இருந்தது. உண்டியலில் சுமார் 3 ஆயிரம் வரை இருந்ததாகவும், இதுகுறித்து பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி