அரசு அங்காடியில் பட்டுக்கூடுகளின் விலை அதிகரிப்பு

72பார்த்தது
தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். பட்டுக்கூடு உற்பத்தி குறைந்ததால் அங்காடிக்கு பட்டுக்கூடு வரத்து கடந்த சில நாட்களாக குறைந்தது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 720 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். நேற்று 1 கிலோ பட்டுக்கூடு அதிக பட்சமாக 545ரூபாய்க்கும் குறைந்த பட்சமாக 206ரூபாய்க்கும், சராசரியாக 448. 80 ரூபாய்க்கும் விற்பனை யானது. மொத்தம் 3 லட்சத்து 23ஆயிரத்து 386-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி