ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3, 000 கனஅடியாக அதிகரிப்பு

62பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப காலமாக தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும் குறைந்தும் காணப்படுகிறது. இந்தநிலையில் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான அஞ்சசெட்டி, கேரட்டி, பீலிக்குண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் நீர்வரத்து அதிகரித்தது அதன்படி இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 3, 000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது நீர்வரத்து அதிகரிப்பால் அருவிகளில் தண்ணீர் ஆரம்பித்துக் கொண்ட துவங்கியது தொடர்ந்து தமிழக கர்நாடக மாநில எல்லைப் பகுதியான பீலிகுண்டலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கண்காணித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி