தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்துக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில். இன்று ஜூலை 27 காலை வினாடிக்கு 1. 15 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 1 மணி நிலவரப்படி வினாடிக்கு 1. 20 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 12-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பீலி குண்டலுவில் நீர்வரத்தின் அளவை மத்திய நீர் வள மேலாண்மை துறை அதிகாரிகள் கணக்கிட்டு வருகின்றனர்.