தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து 3,500 கன அடியாக நீர்வரத்து காணப்பட்டிருந்த நிலையில்
கடந்த சில தினங்களாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழிந்த மழையின் காரணமாக நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. டிசம்பர் 31 இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 5000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் மெயின் அருவி மற்றும் தொங்கும் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லை பகுதியான பீலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீரின் நிலவை தொடர்ந்து கணக்கீடு செய்து வருகின்றனர்.