தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக பொழிந்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழையின் தீவிரம் குறைந்ததை அடுத்து நாளுக்கு நாள் நீரின் அளவு சரிந்து, டிசம்பர் 26 இன்றுடன், கடந்த 6 நாட்களாக 3500 கனஅடியாக நீர்வரத்து நீடித்துள்ளது.
மேலும் தற்போது தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.