தர்மபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு

69பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக 3, 500 கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில், இன்று ஜனவரி 03 காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 2000 கனஅடியாக நீர் வரத்து சரிந்து வந்து கொண்டுள்ளது. தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீர்வரத்து சரிந்ததை அடுத்து ஒரு சில பகுதிகளில் பாறை மேடுகளாக காட்சியளிக்கின்றன சுற்றுலா பயணிகள் ஆற்றின் நடுவில் சென்று செல்ஃபி எடுப்பது அதிகரித்துள்ளதை அடுத்து காவலர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி