தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழையின் காரணமாகவும் ஒகேனக்கல் வனப்பகுதியில் பொழியும் மழையாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவதும் அதிகரிப்பதமாக காணப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கபினி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனை அடுத்து ஒகேனக்கல் ஆற்றில் 7000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இன்று ஜூன் 8 நிலவரப்படி வினாடிக்கு 6500 கன அடியாக நீர்வரத்து சரிந்து காணப்படுகிறது. மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம் என்பதால் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். இதனால் சினி அருவி, மெயின் பால்ஸ், தொங்கும் பாலம், முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.