தர்மபுரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது இங்கு பயிர் செய்யப்படும் தக்காளிகள் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கிருஷ்ணகிரி சேலம் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது இந்த நிலையில் சமீப நாட்களாக தொடர்ந்து பொழியும் மழையின் காரணமாக தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது மேலும் உழவர் சந்தை மற்றும் வெளிமார்க்கெட்டுகளிலும் தக்காளி விலை கடுமையாக சரிந்து உள்ளது உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய் முதல் 14 ரூபாய் வரையிலும் வெளிமார்க்கெட்டுகளில் 15 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது இதனால் தக்காளி உற்பத்தி செய்த ஆதார விலை கிடைக்காததால், பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பலரும் தக்காளிகளை செடியிலேயே அழுக விடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.