தர்மபுரி மாவட்டம் பழைய தர்மபுரி அருகே அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோவிலில் நேற்று மார்ச் 19 இரவு திருத்தேரோட்டத் திருவிழா நடைபெற்றது இதனை முன்னிட்டு திருவிழாவின் முக்கியமான நிகழ்வாக, மாரியம்மன் சமேத அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருஉருவம் அழகாக அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து ஊரின் முக்கிய விதிகள் வழியாக திருத்தேர் வலம் வந்தது பம்பை, மேள வாத்தியங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் தேரோட்ட விழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவச ஆரவாரத்துடன் நடனமாடி கோலாகலமாக கொண்டாடினர்.