தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பூஞ்சோலை மலைப்பாங்கான இந்த கிராமத்தில் சுமார் 137 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள தொடக்கப்பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். உயர்கல்விக்கு வனப்பகுதியில் நடந்து சென்று அரசு பள்ளி அல்லது பென்னாகரம் அரசு கல்லூரிகு செல்ல வேண்டியுள்ளது. தார்சாலை வசதி இல்லாததால் இந்த கிராமத்திற்கு குடிநீர் கொண்டு வரும் வாகனங்களோ பள்ளி கல்லூரிக்கு அழைத்து செல்ல ஆட் டோ, கல்வி நிறுவன வாகனங்ளோ வருவதில் பெரும் சிரமம் உள்ளது. மேலும் இந்த கிராமத்திற்கு என ஒகேனக்கல் குடிநீருக்காக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டும் போதிய குழாய் வசதி செய்து தரப்படாததால் குடிநீர் கிடைக்கவில்லை. தார்சாலை வசதியும், ஒகேனக்கல் குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஊர் பொதுமக்கள் கூறும் போது, பூஞ்சோலை கிராமத்தில் 137 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு குடிநீர் வசதி இல்லை. இதனால் 3 கிலோ மீட்டர் தெலைவில் உள்ள சின்னபெரமனூர் கிரமத்திற்கு சென்று குடிநீர் பிடித்து வருகிறேரம். மண்சாலை. மழைக்காலத்தில் சேறு இருப்பதால் சாலையை பயன்படுத்தப்பட முடியவில்லை. எனவே எங்களது கோரிக்கைகளான ஒனேக்கல் குடிநீர் மற்றும் தார்சாலை வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்றனர்.