தர்மபுரி மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தவர் பரமசிவம். இவர் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநில துணை தலைவராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நேற்று மாலை நல்லம்பள்ளி வட்டார ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு வட்டார தலைவர் துரை தலைமை வகித்தார். பொருளாளர் கைலாசபதி, ரத்தினவேல் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பதவிபெற்ற புலவர் பரமசிவத்திற்கு நிர்வாகிகள், உறுப்பினர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், சத்தியவேல், காவேரி, ராஜேந்திரன், சுப்ரமணியம், பால்ராஜ், பெருமாள், மாதையன், அரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.