தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் சார்பில் கால வரன்முறை ஊதியம் பெறும் ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் பென்ஷன் திட்டத்தில் சேர்ப்பது ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றி வரும் பதிவரை எழுத்தர் பெரும் பணி சலுகைகளை ஊராட்சி செயலாளர் வழங்க வலியுறுத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் திருவருட் செல்வன் செந்தில் மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட பொருளாளர் சந்திரசேகர் வரவேற்றார் மாநில பொருளாளர் மகேஸ்வரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர் நிர்வாகிகள் முத்து துரைவேல் சுரேஷ் சிவன் குணசேகரன் வெங்கடேஷ் கோவிந்தன் வேலு வேட்ராயன் முருகன் பிரகாஷ் கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.