தர்மபுரி: தவெக சார்பில் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா

59பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நேற்று பாப்பாரப்பட்டி பேரூராட்சி அனைத்து அணி சார்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா. கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த். பென்னாகரம் ஒன்றிய செயலாளர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்து பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் இயங்கி வரும் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சால்வைப் போற்றி கேடயம் வழங்கி கௌரித்தனர்.

இந்த நிகழ்வில் மேற்கு மாவட்ட இணை செயலாளர் வீரமணி, பாலக்கோடு ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட மகளிர் அணி தலைவி சத்யா, விவசாய அணி மணி சுற்றுச்சூழல் அணி செந்தில் குமார், தொண்டரணி சுரேஷ். தகவல் தொழில்நுட்ப அணி தினேஷ், விமல், அதியமான், தர்மபுரி நகர செயலாளர் சிட்டி சுரேஷ். கொள்கை பரப்பு அமைப்பாளர் சந்தோஷ், இணையமைப்பாளர் லோக்நாத் வர்த்தக அணி அமைப்பாளர் கார்த்திக் மற்றும் கட்சியினர் மாணவ மாணவிகளின் பெற்றோர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி