தர்மபுரி: பழங்குடியினரை மிரட்டும் வனத்துறையினர்..புகார் மனு

80பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வனசரகத்திற்கு உட்பட்ட காவேரி கரை அருகே உள்ள மணல்திட்டு, புளியன்கோம்பு, கொங்காரப்பட்டி, சிங்காபுரம், ஏமானூர் பகுதிகளில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 

பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் இதர மக்களும் காட்டை விட்டு வெளியேறச் சொல்லி பென்னாகரம் வனசரகத்தில் உள்ள வனத்துறை அலுவலர்கள் மக்களுக்கு எதிராக பொய் வழக்குகளை போடுகின்றனர். 

கிராம மக்கள் வனஉரிமை அங்கீகாரம் கேட்டு கிராம சபை தீர்மானத்துடன் தனி தாசில்தார் மற்றும் தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளனர். இந்த பகுதிகளில் நிலத்தை உழுதுவந்த மக்களை மிரட்டும் விதமாக தனியாக விசாரணைக்கு வர வேண்டும் என்று வனத்துறையினர் மிரட்டி வருகின்றனர்.

வனத்துறை சார்ந்து வாழும் மக்களுக்கும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மக்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டு பட்டா வழங்கிட வேண்டும் என்று தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட வனத்துறை அலுவலரிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் போது குணசேகரன் தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர், ரங்கநாதன் மற்றும் பழங்குடியினர் மக்கள் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி