தர்மபுரி: ஒகேனக்கல் குடிநீர் திட்டம் 2. 0 ஜூலை மாதம் துவக்கம்

51பார்த்தது
இன்று ஏப்ரல் 15 தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி பென்னாகரம் ஒகேனக்கலில் இருந்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 2. 0 எப்போது தொடங்கப்படும் திட்டங்கள் தயாரிப்பு செய்துபட்டு துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மேலும் தமிழக முதல்வர் அவர்களும் ஆய்வு மேற்கொண்டார் ஆனால் தற்போது வரை மக்களுக்கு குடிநீர் சென்று சேரவில்லை தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை எனவே விரைந்து திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பேசினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே என் நேரு ஜூன் மாதம் 25 ஆம் தேதிக்கு மேல் நிதி உதவி கிடைக்கும் என்றும் அதற்கு அடுத்து டெண்டர் கோரப்பட்டு ஜூலை மாதம் பணிகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி