தர்மபுரி: கல்குவாரியில் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

52பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரங்கபுரம் பகுதியில் தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது இங்கு கூத்தப்படையை சேர்ந்த சத்யராஜ் என்பவர் பணிபுரிந்து வருகின்றார் மார்ச் 10 ஆம் தேதி கல்குவாரியில் இருந்து மெட்டல் பொருட்கள் மற்றும் ஏழு மின்மோட்டார்கள் திருடப்பட்டு இருந்தது. இதன் மொத்த மதிப்பு 77 ஆயிரம் ரூபாய் ஆகும். இது குறித்து சத்யராஜ் பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது கல்குவாரியில் காவல் நிலையம் பணிபுரிந்து வந்த முனியப்பன் என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து பென்னாகரம் காவலர்கள் நேற்று மாலை அவரை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி