தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட திருமால்வாடி பகுதியில் நேற்று மாலை பாப்பாரப்பட்டி காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அங்கு வந்த காவேரிப்பட்டினம் பகுதி சேர்ந்த முருகேசன் என்பவரை சோதனை செய்தபோது இருசக்கர வாகனத்தில் குட்கா வைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது இதனை அடுத்து பாப்பாரப்பட்டி காவலர்கள் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இந்த குட்கா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.