தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையம், செல்போன் கடை, பழக்கடை மற்றும் அரசு அலுவலகம் அருகே லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO) அருகில் நேற்று (05.07.2025) சில்லறை லாட்டரி சீட்டுகள் விற்றுக் கொண்டிருந்த கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதான சேகர் (த/பெ ராஜு) என்பவரை பென்னாகரம் காவலர்கள் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.